GRG

Tuesday, December 31, 2019

விஜயின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக் வெளியானது ? ட்விட்டரில் சாதனை 13 லட்சம் ட்வீட் ?

Image
Tamilcinemaa4:
                        * பிகில் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் 31 மாலை  5 மணிக்கு வெளியாகும்  என முன்னரே அறிவித்தனர் .

  இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்திருந்தனர் அவர்களின் காத்திருப்பு வீண்போகாமல் சொன்னதைப்போல போல் மாலை 5 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியானது .

   மாஸ்டர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்   அமர்க்களமாக இருந்தது . இந்த புகைப்படத்தில் விஜய் அவர்கள் புருவத்தை உயர்த்தி பார்ப்பது போலவும் கையில் உள்ள காப்பை மேஜையில் சுற்றுவது போலவும் சும்மா மிரட்டலாக இருந்தது .

        பர்ஸ்ட் வெளியாகி ஒரு மணி நேரத்தில் ட்விட்டரில் 10 லட்சம் டிவீட்களை பெற்று சாதனை படைத்தது தற்போது வரை 13 லட்சம் டிவீட்களுக்கு மேல் போய்க்கொண்டு இருக்கிறது .

   விஜயின் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் விஜய்க்கு  ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார் . முக்கியமாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . படத்தில் விஜய் கல்லாரி ஆசிரியராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

    மேலும் படமானது வருகிற 2020 ஏப்ரல் மாதத்தில் சம்மர் வெளியீடாக  வரவிருக்கிறது .
         

No comments:

Post a Comment