GRG

Sunday, November 11, 2018

நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம் தகவல் சொல்வோருக்கு 1000 ருபாய் பரிசு?

 நைட்டி அணிந்தால் 2000ரூபாய் அபராதம் தகவல் சொல்வோருக்கு 1000 ருபாய் பரிசு?
  • பெண்கள் தூங்கும்போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான ஆடை தான் ''நைட்டி''.தற்போது பார்த்தால் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்திலும் நைட்டியில் தான் இருக்கின்றனர்.இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்  உள்ள கோதகலபள்ளி என்ற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.


    இந்த தலைவர்கள் கூறுவதுதான் அந்த மக்களுக்கு வேதவாக்கு.இந்த தலைவர்கள் தற்போது பெண்கள் நைட்டியை இரவு நேரத்தில் மட்டும் தான் அணிய வேண்டும் பகல் நேரத்தில் அணியக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.அப்படி அணிந்தால் ரூபாய் 2000 அபராதம் என்றும் மீறி நைட்டி அணிவோரை காட்டி கொடுப்பவருக்கு 1000 ருபாய் பரிசு என்றும் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment