GRG

Monday, December 23, 2019

ஸ்டேட் பாங்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு? இனிமேல் எந்த ரகசிய கட்டணமும் கிடையாது ?

Tamilcinemaa4 

           * கடந்த சில வருடங்களாக வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களின் நிலைமையைப் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை ஏனென்றால் வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்க வேண்டும் .

          குறிப்பிட்ட வகையில் வங்கிக்கணக்கில் எப்போது பணம் அதாவது ஸ்டேட் பாங்க் என்றால் கிராம மற்றும் நகர் புறத்தில் 2000 முதல் 3000 வரை மாநகரம் என்றால் 5000 வரை வரைவுத்தொகையை எப்போதும் வைத்திருக்க வேண்டும் . அப்படி இல்லை என்றால் அதற்கு அபராதமாக நம் கணக்கில் பணத்தை எடுப்பார்கள் .

          வருடந்தோறும் நம் கணக்கில் இருந்து நாம் உபயோகப்படுத்தும் ஏ டி எம் கார்டுக்கு  என்று பணம் வசூலிப்பார்கள் .  நம் சேவிங் கணக்கிற்கு என்று ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை வசூலிப்பார்கள் . 
ஏ டி எம் கார்டை 4 அல்லது 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் அதற்காகவும் பணம் வசூலிப்பார்கள் .

          இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான் . தற்போது இதற்கு விடிவு காலம் பொறந்துள்ளது . அதவாது ஸ்டேட் பாங்க் வாங்கியனாது நடுத்தர மக்களை குஷி படுத்தும் வகையில் அதிரடியான திட்டத்தை தற்போது அறிமுகபடுத்தியுள்ளது.

          இந்த திட்டத்தின் பெயர் ஸ்மால் அக்கவுண்ட் (SMALL ACCOUNT) இதன்மூலம் வாடிக்கையாளர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் வங்கி கணக்கை தொடரலாம் . மேலும் ஏ டி எம் கார்டுக்கு பணம் செலுத்த தேவையயில்லை . நம் சேவிங் கணக்கிற்கு என்று ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை செலுத்த தேவையில்லை .

                ஆனால் இந்த கணக்கில் குறிப்பிட்ட அதாவது ரூபாய் 50000 வரை தான் நான் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும் . அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் கே ஒய் சி யில் கையொப்பம் இட வேண்டும் . மேலும் மாதம் நான்கு முறை தான் ஏ டி எம் யை உபயோகப்படுத்த முடியும் அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிப்பார்கள் .

          எப்படி இருந்தாலும் இந்த புது வங்கி கணக்கானது ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்று சொல்லலாம் . என்ன நண்பர்களே இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .
    

No comments:

Post a Comment