GRG

Monday, December 9, 2019

ரஜினிக்கு ஜோடியான கீர்த்திசுரேஷ் ? அம்மா மற்றும் மகளுடன் ஜோடி சேர்ந்த ஒரே நடிகர்?

Image result for keerthi suresh rajinikanthTamilcinemaa4 : 

         * ஒரு நடிகர் அம்மாவிடமும் கதாநாயகனாக நடித்து அடுத்து அவருடைய மகளுடனும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தற்போது வந்திருக்கிறது . அந்த நடிகை வேறு யாருமில்லை நம்ம மகாநதி புகழ் கீர்த்தி சுரேஷ் தான் .



         
Image result for menaka rajini        * கீர்த்தி சுரேசின் அம்மா தான்  பழைய நடிகை மேனகா இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் . தற்போது மேனகா கேரளாவில் வசித்து வருகிறார் . நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ் தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்க்கார், சண்டக்கோழி2, மகாநதி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் . தற்போது அவருக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது . அதாவது தர்பார் படத்திற்கு அடுத்து விஸ்வாசம் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன்பிக்ச்சர்ஸ்  தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்திற்குத்தான் இந்த வாய்ப்பு அவருக்கு அடித்திருக்கிறது .

      * இதன் மூலம் அம்மா மற்றும் மகள் இருவருடனும் கதாநாயகனாக நடிக்கும் பலன் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவருக்கே வாய்த்திருக்கிறது . ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது சினிமாவில் பெண்களுக்கு மட்டும் தான் வயசாகிறது ஆனால் ஆண்கள் அதிர்ஷ்டம் இருக்கும் வரை கதாநாயகர்கள் தான் .


No comments:

Post a Comment