GRG

Monday, December 9, 2019

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் எப்படி ? யாருக்கோ போகவேண்டியது ?

Tamilcinemaa 4 :
            * அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தான் என இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார் . அதாவது தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடை பெற்றது . இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் முதல்முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் . அனிருத் இசை அமைத்துள்ளார்.

                 * இவ்விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ் அவர்கள் என்னுடைய முதல் படமான தீனா படத்தில் அஜித் அவர்களுக்கு 'தல' என்று பெயர் வைத்ததே ரஜினி சார் தான் என்று சொன்னதும்  அரங்கமே சும்மா அதிர்ந்தது . தீனா படத்தில் தான் அஜித் அவர்கள் ஒரு மாஸ் கதாநாயகனாக நடித்து 'தல' என்ற பட்டத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
                murugadoss deena க்கான பட முடிவு


             * ஆனால் தீனா பட வாய்ப்பு முதலில் விஜய் அவர்களுக்குத்தான் வந்தது அப்போது ப்ரண்ட்ஸ்,ப்ரியமானவளே ,பத்ரி  படங்களில் விஜய் பிசியாக இருந்ததால் தீனா படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது அப்படி அவர் அந்த படித்தால் நடித்திருந்தால் 'தளபதி' விஜய் 'தல' விஜய் என்று அழைக்கப்பட்டிருப்பார் . ஆனாலும் தற்போது முருகதாஸ் 'தளபதி' விஜயை வைத்து துப்பாக்கி,கத்தி,சர்க்கார்  என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்து விட்டார் . 




No comments:

Post a Comment