GRG

Friday, December 20, 2019

HERO சிவகார்த்திகேயனின் படத்தின் திரைவிமர்சனம் ? அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி

Tamilcinemaa4:
                 
             * வணக்கம் நண்பர்களே சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது சூப்பர் ஹீரோ படமான ஹீரோ . படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் கல்யாணி ப்ரியதர்சன் ,

ஹீரோ படத்தின் கதை :
         
            படத்தின் நாயகன் சிறுவயதிலிருந்தே  சக்திமான் படத்தை பார்த்துவிட்டு தானும் ஒரு சூப்பர் ஹீரோவாக நினைக்கின்றார் . ஆனால் அவருடைய தந்தை அறிவுறுத்தலின் பேரில் அந்த ஆசையை கை விடுகிறார் . எதிர் பாராமல் அவருடைய தந்தையின் உயிரைக்காப்பற்ற தன்னுடைய சர்டிபிகேட்டை விற்று பணம் பெறுகிறார் . அதற்கடுத்து அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் மீதி கதை .

             படத்தின் முதன்மை நாயகன் என்றால் அது ஆக்சன் கிங் அர்ஜுன் தான் ஏனென்றால் தன்னுடைய நடிப்பில் வேறொரு பரிமாணத்தை காட்டியுள்ளார் . மேலும் பள்ளிகளில் தேர்வில் தோற்கும் மாணவர்களுக்காக அவர் நடத்தும் பள்ளியின் செயல்பாடுகள் நம்மை ஆச்சர்ய பட வைக்கின்றது .

                இந்தியர்களின் கண்டுபிடிப்பு எப்படி எல்லாம் புறக்கணிக்கப்படுகிறது . அந்த கண்டுபிடிப்பை மற்ற நாட்டுக்காரர்கள் எவ்வாறு திருடி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குனர் மித்ரன் அதற்கு அவருக்கு ஒரு சபாஷ் போடலாம் .

                   படத்தில் சிவாவின் நடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அவர் முகமூடி மாட்டி சூப்பர் ஹீரோ தனம் செய்வது எல்லாம் அப்படியே பேட்மேன் படத்தை காப்பி அடித்து எடுத்துள்ளனர் . அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் .

            படத்தின் நாயகி கல்யாணி ப்ரியதர்சன் படத்தில் வந்து போகிறார் மேலும் இது அவருக்கு அறிமுக படம் அவ்வளவுதான் . ரோபோ சங்கர் படத்தில் இருப்பதே தெரியாமல் போய்விடுகிறது . படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் வரும் இவானா சில காட்சிகளே வந்துலும் அவருடைய நடிப்பு பிரமாதம் .

                  படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் அதிலும் ஓப்பனிங் பாடல் சிவாவுக்காக திணிக்கப்பட்டிருக்கிறது இரண்டாவது டூயட் பாடல் தேவையேயில்லை படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது .படத்தின் முதல் 40 நிமிடம் சற்று தொய்வாகத்தான் நகர்கின்றது .படத்தின் இடைவேளையில் இருந்து படமானது சூடு பிடிக்கின்றது .யுவனின் பின்னணி இசை அருமை .

                 படத்தின் வில்லனாக  பாலிவுட் பிரபலம் அபேய் தியோல் அருமையாக நடித்திருக்கிறார் . தற்போது நம் நாட்டின் கல்வி நிலைமையை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளனர் .

                  மொத்தத்தில் ஹீரோ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை மூலம் ரசிக்கவைக்கிறது . ஹீரோ படத்திற்கு தமிழ்சினிமா4 கொடுக்கும் மதிப்பு 5/3 ஸ்டார் .

         ஹீரோ நல்ல கல்வி சம்பந்தப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ படம் ரசிக்கலாம் .









No comments:

Post a Comment