GRG

Monday, April 20, 2020

விஜய்க்கு போன் செய்து நலம் விசாரித்த அஜித்?

விஜய்க்கு போன் செய்து நலம் விசாரித்த அஜித்?
                         * தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்களில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் மாபெரும் இரு சக்திகளாக திகழ்கின்றனர் .

             இரண்டு பேருமே நல்ல நண்பர்களாத்தான் இருக்கின்றனர் . ஆனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை . சமூக வலைத்தளங்களில் முக்கியமாக ட்விட்டரில் இரண்டு பேரின் ரசிகர்களும் நாளுக்கு நாள் சண்டையின் உச்சத்துக்கே செல்கின்றனர் ஹாஸ்டேக் மூலமாக .

          தற்போது இவர்கள் சந்தோஷப்படும் விதமாக ஒரு விசயம் நடந்துள்ளது . அஜித் அவர்கள் விஜய்க்கு போன் செய்துள்ளார் . காரணம் என்னவென்று விசாரிக்கும்போது விஜயின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் பிலிம் மேக்கிங் படித்து வருகின்றார் . தற்போது கொரோனா வைரஸின் காரணமாக உலகமே பாதித்துள்ளது இதனால் உலகம் எங்கும் 144  தடை சட்டம் போடப்பட்டுள்ளது . இதனால் கடைகள் ,போக்குவரத்து, எல்லாம் தடைபட்டுள்ளது .

         ஆதலால் விஜயின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் இருந்து இந்தியா வரமுடியாமல் தவித்து வருகின்றார் . இதனால் விஜய் அவர்கள் மிகவும் கவலையுடன் இருக்கிறாராம் . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் உடனே விஜய்க்கு போன் செய்து அவரிடம் சஞ்சய் பற்றி நலம் விசாரித்துள்ளார் . மேலும் விஜய்க்கு ஆறுதல் கூறியுள்ளார் . ரசிகர்கள் இவ்விரண்டு பேரின் நட்பை பற்றி தெரியாமல் எதிர்மறையான  கருத்துக்களை இணையதளங்களில் பரப்பி வருகின்றனர் .

        இனிமேலாவது ரசிகர்களின் சண்டைகள் தீர்ந்து திருந்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .

No comments:

Post a Comment