GRG

Wednesday, October 30, 2019

5 நாளில் 200 கோடி வசூலை அள்ளிய விஜயின் பிகில் ?


5 நாளில் 200 கோடி வசூலை அள்ளிய விஜயின் பிகில் ?




          நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம்  2019 ஆம் ஆண்டில் வெளிவந்த மகா தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பெண்கள் மற்றும் கால்பந்து  விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தை ஹாட்ரிக் வெற்றிகொடுத்த ராஜாராணி,தெறி,மெர்சல் அட்லீ இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தளபதி விஜயின் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாகிய பிகில் திரைப்படம்.கைதி படத்துடன் போட்டியிட்டு வேலை நாளில் வெளிவந்து முதல் நாளில் படமே பார்க்காத சில விசக்கிருமிகளால் கலவையான விமர்சனம் பெற்றது.இருந்து தளபதி ரசிகர்கள் மற்றும் இல்லாமல் படம் பார்த்த பெண்கள் மற்றும் குடும்பத்தினர் படம் நிஜமாகவே  வெறித்தனமாக இருக்கிறது என்று உண்மையான விமர்சனம் அளித்தனர்.

                இதைத் தொடர்ந்து பிகில் திரைப்படம் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றிபெற்று 5 நாளில் ரூபாய் 200கோடி என்ற இமாலய இலக்கை பெற்று அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் தகர்த்தெரிந்துள்ளது.இதன் மூலம் தொடர்ந்து 3 முறை   200கோடி வசூல் அள்ளிய நடிகர் என்ற பெருமை தளபதி விஜய்யை சேர்ந்துள்ளது.

No comments:

Post a Comment