GRG

Saturday, November 2, 2019

ஒருவழியாக நவம்பர் 29 தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்?

    Tamilcinemaa4

  • ஒருவழியாக நவம்பர் 29 தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்?
  • TAMILCINEMAA4  நவம்பர் 2 :
  •                   தனுஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் நீண்ட நாட்களாக மன்னிக்கவும் நீண்ட வருடங்களாக வெளிவராமல் இருந்த திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்ட ஒவ்வொரு  முறையும் படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்து கடைசிக்கட்டத்தில் வெளியிடமுடியாமல் போனது அனைவருக்கும் தெரிந்த விசயம்.தற்போது அந்த படத்திற்கு ஒரு விடிவு காலம் பொறந்துள்ளது .

                      *அதாவது கவுதம் வாசுதேவ் அவருடைய பணப்பிரச்சனையை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்களிடம் கூறியுள்ளார்.மேலும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் அவருக்கு  போட்டு காட்டியுள்ளார்.படத்தை பார்த்த ஐசரி கணேசன் அவர்கள் படம் மிகவும் நன்றாக இருக்கிறது எனவும் மேலும் தானே வேல்ஸ் நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுவதாகவும்  கவுதம் அவருக்கு தெரிவித்துள்ளார்.

                                         
    *இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கவுதம் வாசுதேவ் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்போகிறார்.இது தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான தகவலாய் உள்ளது.ஏனென்றால் தீபாவளிக்கு முன் வந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது அனைவருக்கும் தெரிந்த விசயம்.பொறுத்திருந்து பார்ப்போம் தோட்டா பாயுமா என்று  ?
 

No comments:

Post a Comment