GRG

Saturday, November 2, 2019

பி.எப் மற்றும் ஓய்வூதியதாரர்ளுக்கு புது வசதி அறிமுகம்


  • பி.எப் மற்றும் ஓய்வூதியதாரர்ளுக்கு புது வசதி  அறிமுகம்?இனி அலைச்சல் மிச்சம் ?

  • Tamilcinemaa4  Nov 2 :

                          *நாம் சேமிக்கும் பணம் 
    பி.எப்.பில் எடுக்க யு.ஏ.என்{UAN} அவசியம்  .அந்த  எண்ணிற்காக, பி.எப் நிறுவனத்திற்கு அலையோ அலை அலைவோம் இனி அந்த கவலை நமக்கு இல்லை.அது எப்படி என்றால் இனிமேல்  நீங்களே உங்கள் யு.ஏ.என்{UAN}. எண்ணை உருவாக்கி கொள்ளலாம்.
                           
                        *எப்படி என்றால் இதற்கான வசதி இ.பி.எப்.ஒ{EPFO}. இணையதளத்தில் தற்போது  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் {UNIVERSAL ACCOUNT NUMBER} கொடுக்கப்படும். அதில் தொழிலாளரின் பி.எப்., எண் மாறும், அதாவது அவர் வேறு வேலைக்கு மாறினாலும் , அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மட்டும் மாறாது. தற்போது பான் எண்{PAN NO} மற்றும் ஆதார் எண், ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த
    நம்பர் மாறாது ஆதலால்  அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.

                     
                       *தற்போது மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை
    தொடங்கி வைத்தார். அதில் முக்கியமாக மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என்{UAN}.
    எண்ணுக்காக தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் விண்ணபித்து பெற தேவையில்லை. யு.ஏ.என். எண்ணை அவ்ரகளே  உருவாக்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார் .மேலும் இரண்டாவது விசயமாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை பெற வேண்டும் என்றால் இனிமேல் எளிதாக டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . இந்த  இரு  வசதிகளும்  தற்போது இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பயனுள்ள தகவலை உடனடியாக அனைவரும் பயன் பெரும் வகையில் அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment