GRG

Wednesday, November 13, 2019

வாத்தியாராக நடிக்கும் விஜய் தளபதி 65 ஸ்பெஷல் ? கமலின் நம்மவர் படத்தின் தழுவலா ?

வாத்தியாராக நடிக்கும் விஜய் தளபதி 65 ஸ்பெஷல் ?

              *பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அடுத்து விஜய் அவர்கள் கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு இணைந்திருக்கும் படத்தில் விஜயின் கதாபாத்திரம் தற்போது வெளிவந்துள்ளது .

     *இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிவடைந்தது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்றுவருகிறது . தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயின் புகைப்படம் வெளிவந்துள்ளது . மேலும் இந்தப்படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி வாத்தியாராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது .

                *தளபதி 65 இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் . கதாநாயகி பேட்ட படப் புகழ் மாளவிகா நாயர் மற்றும் ஆண்ட்ரியா அவர்களும் நடிக்கிறார்கள் . படு வேகமாக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தை வரும்  2020 வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடவிருக்கிறார்கள் . மேலும் இத்திரைப்படம் உலகநாயகன் கமல் நடித்த நம்மவர் படத்தின் தழுவலாக இருக்கும் எனவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகின்றது . அனிருத் அவர்கள்  கத்தி படத்திற்கு அடுத்து விஜயுடன் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment