GRG

Tuesday, November 12, 2019

''வாட்டர் பெல்'' கேரளா பள்ளிக்கு குவியும் வாழ்த்துக்கள் நாமும் இதை செய்யலாமே ?

''வாட்டர் பெல்'' கேரளா பள்ளிக்கு குவியும்  வாழ்த்துக்கள் நாமும் இதை செய்யலாமே ?TAMILCINEMAA4
           
                       *நம் உடலுக்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை 1 உண்ண உணவு 2 உடுத்த உடை  3 இருக்க இருப்பிடம் என்று சொல்வார்கள் ஆனால் 4 வது மிகவும் முக்கியமானது அது தான் தண்ணீர் . முதல் மூன்று விசயங்கள் இல்லாமல் கூட இருக்கலாம் . ஆனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான் ?

                        *நமது உடல் 70% விழுக்காடு நீரால் ஆனது என்று உங்களில் எத்தனை  பேருக்கு தெரியும் . தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும்போதுதான் தண்ணீர் அருந்துகிறார்கள் . ஆனால் தண்ணீரைவிட செயற்க்கையான குளிர்பானங்களைத்தான் விரும்பி அருந்துகிறார்கள் . இது எவ்வளவு வேதனையான விசயம் . தெரிந்தே நாம் நோய்க்கு ஆளாகிறோம் .

                      *ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு நபர் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் . அப்படி குடித்தால்தான் அவர் ஆரோக்கியமாக வாழமுடியும் . தற்போது நாம் அப்படி செய்கிறோமா கொஞ்சம் நீங்களே யோசித்துப்பாருங்கள் . இதை மாற்றும்  விதமாக கேரளாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ''வாட்டர் பெல்'' என்ற விசயத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் . வாட்டர் பெல் என்றால் பள்ளியில் தினமும் 3 முறை மணி அடிக்கப்படும் . ஒவ்வொருமுறையும் மணியடிக்கும்போது அனைத்து மாணவர்களும் தண்ணீர் அருந்தவேண்டும் . இதனால் அவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு மட்டும் இல்லாமல் . அவர்களின் இரத்த ஓட்டமும் சீராக ஆரோக்கியமாக இருக்கும் . இந்த பள்ளியை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர் .

               
 *பெற்றோர்களே நீங்களும் தண்ணீரின்  அவசியத்தை உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து கூறுங்கள் . மேலும் இந்த தகவலை உங்கள் குழந்தைகள்  படிக்கும்  பள்ளியின் ஆசிரியர்களிடமும் தெரிவியுங்கள் . ஏனென்றால் அனைத்துப்பள்ளிகளிலும் இந்த முறை ''வாட்டர் பெல் '' வந்தால் வருங்கால சந்ததிகளுக்கு நல்லது தானே . மாற்றம் நம்மில் இருந்து தொடரட்டும் . நன்றி  வணக்கம் அடுத்த பதிவில் சந்திப்போம் .



1 comment:

  1. நல்ல தகவல் உங்கள் சேவை தொடரட்டும்👍💐

    ReplyDelete