GRG

Friday, November 1, 2019

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை?அரசு அதிரடி அறிவிப்பு காரணம் ?

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை?அரசு அதிரடி அறிவிப்பு காரணம் ?

  • Tamilcinemaa4 
  •                    
                           *தற்போது உள்ள போக்குவரத்து நெரிசலில் கனரக வாகனங்களை சாமர்த்தியமாக ஓட்டுவது என்பதே கடினமாகியுள்ளது.மேலும் படித்தவர்கள் மத்தியில் கனரக வாகனங்களை ஓட்டுவது குறைந்துள்ளதை அடுத்து 'ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை' என தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.தற்போது மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர்கள்  'டிரைவிங் லைசென்ஸ்' பெற குறைந்தபட்சம் கல்வித்தகுதி 8ம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம் ஆகும் . இப்போதுள்ள காலகட்டத்தில்  கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில். 

  •                       *இதனால் ஓட்டுனர்கள்  பற்றாக்குறை அதிகரித்துள்ளது . எனவே கனரக வாகன உரிமையாளர்கள்  இனிமேல்  படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது என கருதி .அதாவது  'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் கல்வித்தகுதியை நீக்க வேண்டும்' என மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

                         *இதை பரிசீலித்து  பார்த்து புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி செப்டம்பர் . 23ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது . அதைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் திரு.சமயமூர்த்தியும் 'கனரக வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க வேண்டாம்' என அதிரடி  உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை பொது மக்களுக்குத் தெரியும் வகையில் அனைத்து  அறிவிப்பு பலகையிலும்  ஒட்டும் படியும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் கனரக வாகனம் ஓட்டுனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதே அவர்களுடைய இலக்கு .

No comments:

Post a Comment