GRG

Friday, November 15, 2019

அஜித்தால் விஜய்க்கு { சங்கத்தமிழன் } வந்த சோதனை ? அப்செட்டில் தல அஜித் ரசிகர்கள் ?


'வீரம்' பட நஷ்டத்தை வெளிப்படையாக வெளியிட்ட பிரபல விநியோகஸ்தர் ? அப்செட்டில் 'தல' அஜித் ரசிகர்கள் ?

  •               
     
           *விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகாமல் இன்று வெளியானது . இதற்கு  காரணம் யார் என்று பார்த்தால் . தல அஜித்தான் அது  எப்படியென்றால் 2014 வருடம் தல அஜித்தின் வீரம் மற்றும் தளபதி விஜயின் ஜில்லா திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது . 

                   *ஜில்லா மற்றும் வீரம் இரண்டு படங்களுமே ஹிட் அடித்தன  தற்போது வீரம் படத்தை தயாரித்த விஜயா தயாரிப்பு நிறுவனம்தான் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தையும் தயாரித்தது . ஆனால் இத்திரைப்படம் வெளிவருவதில் தொடர்ந்து சிக்கல் வந்த நிலையில் அதற்க்கு காரணம் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படம் தான் என பிரபல விநியோகஸ்தர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்  வீரம் படம் வெளியாகி நன்றாகத்தான் ஓடியது ஆனால் அதே நாளில் வெளியான விஜயின் ஜில்லா திரைப்படம் தான் மக்கள் மத்தியில் வெற்றிபெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இதனால் எனக்கு 41 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது மற்றும் இன்று வரை வட்டி 29 லட்சம் சேர்த்து விஜயா தயாரிப்பு நிறுவனம் 70 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளார் .

               
 
  •                  * மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தையும் விஜயா தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது ஆனால் அந்த படத்தை அவர்கள் வேறொரு விநியோகஸ்தருக்கு விற்றுவிட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது . .

No comments:

Post a Comment