GRG

Sunday, November 17, 2019

ஐயப்பன் பக்தர்கள் விரத காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்?


ஐயப்பன் பக்தர்கள் விரத காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்?
Tamilcinemaa4:
           * ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அனைத்து பார்வையாளர்களுக்கும் வணக்கம் . இன்று நவம்பர் 17 தமிழுக்கு கார்த்திகை மாதம் முதல் நாள் . கார்த்திகை மாதம் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில்  வருவது அருள்தரும் ஐயப்பன் சாமி தான்.

     * கார்த்திகை முதல் நாள்
முதல் முறையாக ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து விரதம் இருப்பவர்களுக்கான விதிமுறைகள் தான் இந்த பதிவு மற்றும் மேலே விடீயோவையும் இணைத்துள்ளேன் . ஐயப்பனுக்காக மாலை போடுவோர்கள்  முதலில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் . மேலும் உணவு முறை தினமும் மதியம் மட்டும் விரதம் இருந்து இலையில் சாப்பிட வேண்டும் . ஐயப்பன் விரதமானது ஒரு மண்டலம் அதாவது 48 நாள்கள் விரதம் இருக்க வேண்டும் . தினமும் ஒரு முறையாவது அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வர வேண்டும் .

            * மது , மாது ,புகைப்பழக்கங்களை அறவே விட்டுவிட வேண்டும் .மேலும் வீட்டிற்கு விலக்கான பெண்களை பார்க்கக்கூடாது . மற்றவர்களிடம் பேசும் போது சாமியே சரணம் என்று சொல்லித்தான் பேச வேண்டும் . புதிதாக மாலை போடும் பக்தர்கள் 'கன்னிசாமி' என்று அழைக்கப்படுவார்கள் கன்னிசாமி கட்டாயமாக 'கன்னிபூஜை' நடத்த வேண்டும் . பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி போகும் போது தமது வீட்டாளர்கள் மற்றும் உறவினர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது .

                * மேலும் விரதமுறைகளை பற்றி தெரிந்து கொள்ள மேலே  உள்ள விடீயோவைப்பாருங்கள் நண்பர்களே . ஓம் சாமியே சரணம் ஐயப்பா 

No comments:

Post a Comment