GRG

Friday, November 22, 2019

விஜய்க்கு மெழுகு சிலை வைத்த கன்னியாகுமாரி ரசிகர்கள் ?

விஜய்க்கு மெழுகு சிலை வைத்த கன்னியாகுமாரி ரசிகர்கள் ?
                 
                 *தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நடிகர் என்றால் அது தளபதி விஜய் அவர்கள் தான் என்று சொன்னால் மிகை ஆகாது ஏனென்றால்  தமிழர்கள் மட்டும் இல்லாமல் மொழியைத் தாண்டி அனைத்து ரசிகர்களின்   நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம் விஜய் அவர்களை .

                      * தளபதி விஜயின் தீபாவளி வெளியீடாக வந்த பிகில் படமும் வசூலில் 300 கோடியைத்தாண்டி அனைத்து திரை அரங்குகளிலும் வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது . அதிலும் தமிழ் நாட்டிலும் பிற நாடுகளிலும் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது பிகில் திரைப்படம் .

                        * தற்போது விஜய் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கன்னியாகுமரியில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது . இந்த சிலை அப்படியே விஜய் அவர்களை நேரில் பார்ப்பதைப்போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த மெழுகு சிலை விஜய் அவர்களின் தெறி படத்தில் உள்ள விஜயின் கெட்டப்பைபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த சிலை தற்போது கன்னியாகுமரியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது . இந்த மெழுகு சிலையை அனைத்து மக்களும் பார்வை இட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர் .


No comments:

Post a Comment