GRG

Friday, December 13, 2019

கேப்மாரி திரைவிமர்சனம் 5 ? CAPMAARI MOVIE REVIEW நவீன கவர்ச்சி காமசூத்திரா

                    Image result for capmaari
Tamilcinemaa4 :
                 * கேப்மாரி படத்தின் இயக்குனர் புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இசை சித்தார்த் விபின் படத்தின் நாயகனாக ஜெய் நாயகி அதுல்ய ரவி மற்றும் வைபவி சாண்டில்யா மற்றும் தேவதர்ஷினி ,சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

படத்தின் கதை : 
               கேப்மாரி படத்தின் கதை என்று பார்த்தால் இது ஒரு நவீன காமசூத்திரா என்று சொல்லலாம் ஏன் என்றால் படத்தில் அவ்வளவு நெருக்கமான காட்சிகள் உள்ளது மற்றும் ஹீரோ ஜெய் ஐ டி கம்பெனியில் வேலை பார்ப்பவர் அவர் உடன் வேலைபார்ப்பவரான தோழி அதுல்யா அவரை ஒரு மனதாக காதலிக்கிறார் . ஹீரோ ஜெய்க்கு பீர் என்றால் அவ்வளவு இஷ்டம் ஒரு முறை ரயிலில் போகும்போது வைபவியை சந்திக்கிறார் அப்போது பீர் அடிக்கும் ஜெய் மற்றும் வைபவி எல்லை மீறுகின்றனர் . அதற்கடுத்து நீண்ட நாட்களுக்கு அப்புறம் சந்திக்கின்றனர் உடனே திருமணம் செய்துகொண்டு காதலித்து வாழ்கின்றனர் . இதற்கிடையில் ஒரு நாள் அதுல்யாவின் வீட்டில் மது அருந்தும் ஜெய் அதற்கடுத்து அவர் முன் அதுல்யா கர்பமாக வந்து நிற்கிறார் இதற்கு யார் காரணம்  . இந்த மூன்று பேர் மத்தியில் நடக்கும் சண்டை மற்றும் உணர்ச்சி போராட்டங்களை இயக்குனர் நன்றாகவே கையாண்டிருக்கிறார் . படத்தில் சித்தார்த்தின்   இசை பக்கபலமாக உள்ளது பாடல்கள் தான் தேவையற்ற இடங்களில் வந்துபோகின்றன  எல்லோருக்கும் பிடித்த அதுல்யா இந்த படத்தில் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளார் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களை பெண்களே சரளமாக பேசுகின்றனர் . அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் . இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் 70 வது படமான கேப்மாரி இந்த வயதில் இப்படி ஒரு படம் எடுத்ததாய் நம்பலால் நம்ப முடியவில்லை . இருந்தாலும் படம் கலகலப்பாகவும் உணர்ச்சி பூர்வாமாகவும் நகர்கிறது . படத்தில் பீர் அருந்தும் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம் .

படத்தின் ப்ளஸ் :

             இளைஞர்களுக்கு புடித்தமான கதை
            தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் நேரடி சம்பவம்
            ஜெய்யின் நடிப்பு அதுல்யாவின் அழகு

படத்தின் மைனஸ் :

           பாடல்கள் தேவையற்ற இடங்களில் வருவது சலிப்பூட்டுகிறது
           இரட்டை அர்த்த வசனங்கள்
           குடும்பங்கள் குழந்தைகள் பார்க்க முடியாது
       
                          Image result for capmaari movie cast

* கேப்மாரி மொத்தத்தில் தமிழ்சினிமா4 ரேட்டிங் ----> 5 க்கு 2 ஸ்டார் {5/2}
 

No comments:

Post a Comment