GRG

Friday, December 13, 2019

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வந்த தமிழக டாக்டர் மீண்டும் மாயம் ? கைலாசா சென்று விட்டாரா ?

Image result for மனோஜ்குமார் டாக்டர் பெரியகுளம் தேனி நித்தியானந்தா

Tamilcinemaa4:
                 படத்தில் இருப்பவரின் பெயர் தான் மனோஜ் குமார் இவர் எம் பி பி எஸ் படித்த மருத்துவர் . இவர்  தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடி தெருவை சேர்ந்தவர் . இவர் மருத்துவராக தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மணியாற்றி வந்தார்

       இந்நிலையில் மனோஜ்குமார்  தனது சகோதரி வனிதாவின் மகள் நிவேதா வயது (21) என்பவருடன் நித்யானந்தா ஆசிரமத்துக்கு கடந்த வருடம்  இருவரும் சென்றார்கள் .  அதன் பிறகு அவர்கள் இரண்டு பேரும் வீடு திரும்பவில்லை . பின்னர் விசாரித்து பார்த்ததில் அவர்கள் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று பெங்களூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது .

      பின்னர் உடனடியாக அவர்களை பார்க்க சென்ற மனோஜ்குமாரின் உறவினர்களை நித்தியானந்தா ஆசிரமத்தின் ஊழியர்களால்  விரட்டியடிக்கப்பட்டனர்  . இதனால் அவர்கள்  தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர்  . இந்த புகாரின் பேரில்  தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெங்களூர் விரைந்தனர் .

      இவர்களுக்கு உதவியாக  கர்நாடக போலீசார் மற்றும் தமிழக போலீசார்  நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நுழைந்து அங்கு இருந்த  டாக்டர் மனோஜ் குமார் மற்றும் நிவேதாவை இருவரையும் மீட்டு வந்தனர் . அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர் .

      பின்னர் 
பெரியகுளம் வீட்டில் இருந்த டாக்டர் மனோஜ்குமார் இரண்டு நாட்களில் எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை நான் மமீண்டும் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு போக வேண்டும் என பெற்றோர்களிடம் வற்புறுத்தினார் . அனால் பெற்றோர்கள் தங்கள் கவலைகளை சொல்லி மீண்டும் தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைக்கு செல்லும்மாறு கூறியதை அடுத்து இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றார் தற்போது மீண்டும் அவர் காணாமல் போய்விட்டார் .


Image result for நித்தியானந்தா கைலாசா
         இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த மனோஜ்குமாரின் பெற்றோர் ஒரு வேலை நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு தன் மகன் சென்று விட்டானோ என நினைத்து போலீசில்   மனு கொடுத்துள்ளனர் . தற்போது கைலாசவிற்கு போவதற்கு இணையதளம் வாயிலாக கிட்டத்தட்ட 12 லட்சம் விண்ணப்பித்து உள்ளது  குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment