GRG

Thursday, December 12, 2019

பல தடைகளை தாண்டி பிகில் இன்று வெற்றிகரமான 50 நாள் கொண்டாட்டம் ? வசூல் சக்கரவர்த்தி விஜய்

Image
Tamilcinemaa4 :

             தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளிவந்த பிகில்  திரைப்படம் இன்று டிசம்பர் 13 தனது வெற்றிகரமான 50 வது நாளில் அடியெடுத்து ஏகப்பட்ட திரைஅரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .

          இயக்குனர் அட்லீ தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் பிகில்  அதற்க்கு முன்னாடி தெறி ,மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்ததால் பிகில் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது .படம்வெளிவரும் முன்னதாகவே பாடல்கள் சிங்கப்பெண்ணே மற்றும் விஜய் பாடிய வெறித்தனம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன .

   பிகில் திரைப்படம் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அதாவது வேலை நாளில் கைதி படத்துடன் போட்டியோடு வெளிவந்தது . படம் வெளியானதும் படம் பார்த்தவர்களிடையே படம் மாபெரும் ஹிட் அடித்தது . ஆனால் சில விஷக்கிருமிகள் அதாவது காசு வாங்கிக்கொண்டு அல்ப வேலைகளை செய்யும் கூட்டம் பல பிகில் படத்திற்கு எதிராக படத்திற்கு கலவையான விமர்சனத்தை தந்தது . இவர்கள் எவ்வளவுக்கு எவ்ளோ எதிர்மறை விமர்சனம் தந்தார்களோ ஆனால் அதற்க்கு மாறாக தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக பிகில் படத்தை பார்க்க வவந்த மக்களால் அங்கீகரிக்கப்பட்டு  படம் மாபெரும் ஹிட் அடித்தது .

           
Image result for vijay girl fans celebration

     
           இதனால் பிகில் முதல் இரண்டு நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது தமிழ்நாட்டில் தற்போது வரை பிகில் 148 கோடி வசூல் செய்துள்ளது .மேலும் கேரளா ,ஆந்திரா ,கர்நாடகா வெளிநாடு என வெளியான அனைத்து இடங்களிலும் தற்போது வரை பிகில் மொத்தமாக 308 கோடி என்ற இமாலய வசூல் சாதனை செய்துள்ளது ஒரு தமிழ் திரைப்படம்  .

             இதெல்லாம் யாருக்காக தனி ஒரு நல்ல மனிதன் விஜய் என்ற பெயருக்காக தான் . விஜயின் 50 வது படமான  சுறா படுதோல்வி  அடைந்ததும் இதோடு அவருடைய சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று சில ரசிகர்கள் வேறொருவரின் ரசிகர்கள் ஆன கட்டத்தில் . விஜயை மட்டுமே நம்பிய வெறித்தனமான ரசிகர்களின் ஆதரவால் இன்று விஜய் யாருமே நெருங்கமுடியாத ஒரு இடத்தில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகை ஆகாது .

        பிகில் திரைப்படம் இன்றும் ஏராளமான திரைஅரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருப்பது . விஜயின் மாய சக்தியை காண்பிக்கிறது . தற்போது தமிழ் சினிமா விஜய் என்ற வசூல் சக்கரவர்த்தி கையில் தான் உள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது .

          


No comments:

Post a Comment