GRG

Thursday, December 12, 2019

ஆபாச படவிவகாரம் திருச்சியில் முதல் கைது ? மேலும் லிஸ்ட் ரெடியாக உள்ளது போலீஸ் அசத்தல் ?

                        Image result for குழந்தைகள் ஆபாச பட விவகாரம் திருச்சியில் கைது
Tamilcinemaa4 :

          * இந்தியாவில் பாலியல் குற்றங்கள்  நாளுக்கு நாள் பெருகி வந்ததை அடுத்து . பாலியல் குற்றங்களை தடுக்க எண்ணிய காவல்துறையினர் நல்ல நடவடிக்கை ஒன்றை எடுத்தனர் . அதாவது இணையதளங்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்களும் அதை மற்ற பேஸ்புக் , வாட்ஸ்அப்  மற்றும் மற்றவர்களுக்கும் அனுப்புவர்களையும் தனியாக கண்காணித்தனர் . இதற்காக தனிக்குழுவையும் நிர்மானித்தார் தமிழக கூடுதல் டி ஜி பி ரவி அவர்கள் .

             தற்போது இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் திருச்சியை சேர்ந்த பாலக்கரை காஜாப்பேட்டை புது தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்கிற 42 வயது நபர் வழக்கம் போல் குழந்தைகள் ஆபாச விடீயோக்களை முகநூலில் பகிர்ந்து வந்துள்ளார் .

              இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் வீட்டின் கதவை தட்டிய போலீஸ் அதிகாரிகள் அப்படியே  அலேக்காக அவரை தூக்கிவந்துவிட்டனர் . போலீஸ் வருவதை முன் கூட்டியே அறிந்த அல்போன்ஸ் அவர் மொபைலில் உள்ள அணைத்து ஆபாச படங்களையும் அழித்துள்ளார் . ஆனாலும் அவர் முகநூலில் பதிவேற்றம் செய்வதற்க்காக இருந்த மெஸ்சேன்ஜர்ரில் மாட்டி விட்டார் . அதில் ஏராளமான ஆபாச படங்களை அனுப்பியுள்ளார் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் .

                
Image result for குழந்தைகள் ஆபாச பட விவகாரம் திருச்சியில் கைது            * மேலும் கைது செய்யப்பட்ட அல்போன்ஸ் போக்சோ உள்ளிட்ட 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி அணைத்து மகளிர் காவல் துறையினர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர் . கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ஐ டி ஐ படிப்பை முடித்து எந்த வெளிக்கும் செல்லாமல் ஆபாச படம் பார்ப்பதையே குறிக்கோளாக வைத்திருந்து சுற்றித்திரிந்துள்ளார் . மேலும் 42 வயதான அல்போன்ஸ்க்கு யாரும் பெண் தரமுன்வரவில்லை 3 வருடங்களுக்கு முன்பு தான் பெற்றோர்கள் போராடி இவர்க்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் . திருமணம் ஆகியும் குழந்தையில்லாமல் இருந்த இவர் நாகர்கோவிலில் தங்கி வீட்டு வேலை செய்து வந்த நிலையில் தற்போது தீய எண்ணங்களால் ஆபாச வழக்கில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்  . 
     இது வெறும் ஆரம்பம் தான் இது போல் ஆயிரக்கணக்கானவர்களின்  லிஸ்ட் ரெடியாக இருக்கிறது என கூறினார் காவல் துறை அதிகாரிகள் . இதனால் பல பேர் பதுங்கி வருகிறார்கள் என்று சொல்லலாம் .

No comments:

Post a Comment