GRG

Saturday, December 14, 2019

தளபதி 64 படப்பிடிப்பில் இன்று வெள்ளைசட்டையில் வெளியான விஜயின் சூப்பர் வீடியோ ? பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு


Tamilcinemaa4

         * பிகில்  திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் இணைந்திருக்கும் படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில் . ரசிகர்கள் அனைவராலும் தளபதி 64 என்று அழைக்கப்படும்  இப்படத்தின் . படப்பிடிப்பு தளத்தின்  புகைப்படம் மற்றும் வீடியோ தொடர்ந்து எந்த திரைப்படத்திற்கும் இல்லாதவாறு  வெளிவந்து கொண்டு இருக்கிறது .

            மேலும் இத்திரைப்படத்தில்  விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கிறார் . தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில்  சிம்மோகா பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது . கர்நாடகாவில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செத்துள்ளனர் .

              சிம்மோகவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் விஜய் தங்கியுள்ளார் .  தினமும் ஹோட்டலை சுற்றி ஆயிரக்கணக்கான தளபதி ரசிகர்கள் விஜயை பார்க்க ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் . தினமும் ஹோட்டலில் இருந்து விஜய் அவர்கள் வெளியில் வரும்போது அனைத்து ரசிகர்களுக்கும் வணக்கம் தெரிவித்து கையை  அசைத்து விட்டுத்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தளபதி விஜய் அவர்கள் .

          இன்று தளபதி விஜய் அவர்கள் வெள்ளை சட்டையில்  சூப்பராக இருந்தார் அந்த விடியோவை கர்நாடகா ரசிகர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர் . நீங்களே மேலே உள்ள வீடியோவை பார்த்து ரசியுங்கள் . தளபதி 64 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நாயகியாக மாளவிகா மோகன் .ஆண்ட்ரியா நடிக்கிறார்கள் . படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற டிசம்பர் 31 இரவு வெளிவரவிருக்கிறது . படம் 2020 ஏப்ரல் மாதம் சம்மர் வெளியாகவுள்ளது .

           



No comments:

Post a Comment