GRG

Monday, December 9, 2019

85 லட்சத்துக்கு விலை போன ஒரு வாழைப்பழம் ? காரணம் கேட்டால் சிரிக்காமலும் சிந்திக்காமலும் இருக்க முடியாது ?




Tamilcinemaa4:

          ஒரு வாழைப்பழத்தின் விலை 85 லட்சமா நிஜமாகவே நடந்துள்ளது இந்த நிகழ்வு . அதாவது மியாமி நாட்டில்  நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப் படுத்தப்பட்ட ஒரு வாழைப்பழம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் வரை ஏலம் போன சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில்  ஆழ்த்தியுள்ளது. மேலும் இத்தாலிய கலைஞரான மௌரிஷியோ என்பவர் தன் வித்தியாச முயற்சிகளில் ஆர்வம் கொண்டவர் இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர் . தற்போது மிகவும் வேடிக்கையாக  ஒரு சாதாரண வாழைப்பழத்தை தன் படைப்புக்கு பயன்படுத்தினார்  மௌரிஷியோ, அந்த வாழைப்பழத்தை  கண்காட்சி நடந்த ஹோட்டல் அறையில் வெறும் சிறிய டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார் மேலும் அந்த வாழைப்பழத்திற்கு காமெடியன் என பெயரும் வைத்துள்ளார் .

             



           பின்னர்  அந்த காமெடியன் வாழைப்பழமானது ஏலத்திற்கு வந்தது அதை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 85 லட்சத்திற்கு விலை போனது 
மௌரிஷியோவிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது . இதனால் கூட்டத்தில்  உள்ளவர்கள் அந்த வாழைப்பழத்தின்  பெயர் காமெடியன் இல்லை அதை விலை கொடுத்து வாங்குனவன்தான் காமெடியன் என்று கலாய்த்தனர் . இதை விட மேலாக ஒருவர் அந்த வாழைப்பழத்தை அப்படி எடுத்து அப்படியே சாப்பிட்டுவிட்டார் . இதனால் எலாம் நடந்த இடமே சிரிப்பலையில் மூழ்கின .

        இதெல்லாம் ஒருபுறம்  இருக்கட்டும்  கொஞ்சம் யோசியுங்கள் எவ்வளவோ நாடு மிகவும் பின் தங்கியுள்ளன . ஒரு குழந்தை ஒரு வேலை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகின்றது . இவர்கள் என்ன வென்றால் வெறும் ஒரு வாழைப்பழத்தின் மேல் ஒரு டேப்பை ஓட்டுவார்களாம் அதை ஒருவர் 85 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்குவார்களாம் . என்றைக்கு திருந்துமா இந்த சமூகம் .

No comments:

Post a Comment