GRG

Thursday, December 12, 2019

புரோட்டா சாப்பிடுபவரா நீங்கள் ? கொஞ்சம் இதை படியுங்கள் இவ்ளோ பேர் இறந்தார்களா ?

Image result for parotta eatTamilcinemaa4 :

         * வணக்கம் நண்பர்களே இன்று முக்கியமான ஒரு விழிப்புணர்வு பதிவைத்தான் அதாவது உண்மையான தகவலைதான் பார்க்கப்போகின்றோம் . அதாவது  விருதுநகர் மாவட்டத்தில்  கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 30 லிருந்து 40 வரை தான் . மேலும் இதில் அதிகமான பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார்கள் . அதற்கு காரணம் என்ன வென்று பார்த்தால் டாக்டர்கள் சொன்ன விசயம் படு பயங்கரமாக இருந்தது .

      * இறந்தவர்கள் அனைவருமே கடைசியாக புரோட்டா சாப்பிட்டுள்ளனர் நீங்கள் கேட்கலாம் புரோட்டாவில் அப்படி என்ன கெடுமையான  விஷயம் உள்ளது என்று . புரோட்டா தயாரிக்க மைதா மாவை பயன்படுத்துகிறார்கள் . 
மைதா மாவில்  நார்ச்சத்து  என்று எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் செயற்கையாக ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

Related image
              
 * 'பெண்சாயில் பெராக்ஸைடு ' இந்த ரசாயனம்தான் நாம் வெள்ளை முடியில் அடிக்கும் ஹேர் டையில் உள்ள ரசாயனக் கலவை . இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம் . மேலும் உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக  நம் நாட்டில்தான் உள்ளனர் . அதுமட்டுமில்லாமல்  சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள். 

              * இறந்தவர்களில் மது அருந்திவிட்டு புரோட்டா சாப்பிட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது . ஏனென்றால் புரோட்டாவானது செரிக்காமல் அவர்களுடைய இதயத்தை பாதித்து மாரடைப்பு வந்து அவர்கள் இறந்திருக்கிறார்கள் என்ற தகவல்களை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் . இனிமேல் நண்பர்களே புரோட்டாவானது என்றாவது ஒரு நாள் சாப்பிட்டால் பரவாயில்லை, முக்கியமாக மது அருந்தி விட்டு புரோட்டாவை நினைத்து கூடப்பார்க்காதீர்கள் . அதற்குப்பதிலாக இரவில் லேசான உணவை எடுத்துக்கொள்ளுங்கள் அதாவது இட்லி , தோசை , சப்பாத்தி , இடியப்பம் இந்த வகை உணவுகள் உங்களை நிச்சயம் காப்பாற்றும் .

            * நமது முன்னோர்கள் பயன்படுத்திய கம்பு , ராகி , சோளம் , கேப்பை , உளுந்தங்கஞ்சி , நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை உணவில் பயன்படுத்தி வாருங்கள் எந்த நோயும் உங்களை எட்டி கூடப்பார்க்கத்து . சிந்து செயல்படுங்கள் நாம் உண்ணும் உணவே நமக்கு சிறந்த மருந்து என்பதை மறவாதீர்கள் .

No comments:

Post a Comment