GRG

Tuesday, December 17, 2019

சக மாணவனை போலீசிடமிருந்து காப்பாற்ற மாணவி செய்த துணிச்சல்மிக்க செயல் ?


                  மாணவி ஆயிஷா ரென்னா                         Tamilcinemaa4:

                   *  குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது . ஆனால் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முதலில் அமைதியாக நடைபெற்ற போராட்டமானது தற்போது மிகப்பெரிய வன்முறை களம் ஆகிவிட்டது .

      இதை காவல்துறையினர் மாணவர்களை போட்டு அடித்து துன்புறுத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கி வருகிறது .

         அதில் காவல்துறையினர் ஒரு மாணவனை தாக்கும்போது சக மாணவிகள் ஒன்று சேர்ந்து மனித கேடயமாக மாறி அந்த மாணவனை காப்பற்றும் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று தற்போது வைரல் ஆகிவருகிறது . அதிலும் ஒரு மாணவி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையை நீட்டி மிரட்டுகிற புகைப்படம் . அந்த பெண்ணின் வீரத்தை பறை சாற்றுகிறது .
Image                
                      * அந்த பெண்ணின் பெயர் ஆயிஷா ரென்னா 22 வயதான       அவர் கேரளாவை சேர்ந்தவர் . அவர் ஜாமியா பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்து வருகிறார் . போராட்டம் நடைபெற்ற போது நாங்கள் 9 மாணவிகள் மற்றும் ஒரு ஆண் நண்பன் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க ஒரு காரின் பின்புறத்தில் ஒளிந்து கொண்டோம் . அப்போது அங்கு வந்த காவல்துறையினர் எங்களை பார்த்து வெளியில் வாருங்கள் நாங்கள் பெண்களை அடிக்க மாட்டோம் என கூறினார் . ஆனால் நாங்கள் வெளிவர மறுத்துவிட்டோம் அப்போது எங்களுடன் இருந்த ஆண் நண்பன் சஹிம் அப்துல்லாவை வெளியில் இழுத்து அனைவரும் அடித்தனர் . அப்போது சகா மாணவிகள் நாங்கள்  ஒன்று சேர்ந்து அந்த மாணவனை காப்பாற்றினோம் என வீர  மங்கை ஆயிஷா கூறினார் . ஆயிஷாவின்  தைரியமும் துணிச்சலும் நிஜமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று .

No comments:

Post a Comment